தமிழகத்தில் வேலை இல்லா திண்டாட்டம் நிலவுகிறது - மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு

தமிழகத்தில் வேலை இல்லா திண்டாட்டம் நிலவுவதாக குற்றஞ்சாட்டி உள்ள திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சுமார் ஒரு கோடி இளைஞர்கள் வேலை தேடி காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்
தமிழகத்தில் வேலை இல்லா திண்டாட்டம் நிலவுகிறது - மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு
x
தமிழகத்தில் வேலை இல்லா திண்டாட்டம் நிலவுவதாக குற்றஞ்சாட்டி உள்ள திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், சுமார் ஒரு கோடி இளைஞர்கள் வேலை தேடி, காத்திருப்பதாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், சுமார் 4 லட்சம் பட்டதாரிகளும், சுமார் 3 லட்சம் முதுநிலை பட்டதாரிகளும் ஆசிரியர் வேலைக்காக காத்திருப்பதாகவும்  சுட்டிக்காட்டி உள்ளார். பிற மாநில முதலமைச்சர்கள் எல்லாம் தமிழகம் வந்து முதலீடு தேடுவதாகவும், ஆனால், தமிழகத்தில் உள்ள  தொழில் முனைவோர் எல்லாம் அண்டை மாநிலங்களை நோக்கி ஒடுவதாகவும் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்