கருணாஸூக்கு நிபந்தனைகளுடன் கூடிய ஜாமின்...

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காவல் துறை அதிகாரிகள் மற்றும் சில குறிப்பிட்ட சமூகத்தினர் குறித்து அவதூறாக பேசியதாக கைதான சட்டமன்ற உறுப்பினர் கருணாஸூக்கு நிபந்தனைகளுடன் கூடிய ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
கருணாஸூக்கு நிபந்தனைகளுடன் கூடிய ஜாமின்...
x
கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று  கருணாஸை நுங்கம்பாக்கம் போலீசார் கைது செய்தனர்.. அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்ட போலீசாரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில்,கருணாஸ் சார்பில் எழும்பூர் நீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது. இன்று 14 வது குற்றவியல் நீதிபதியான ரோஸ்லின் துரை, கருணாஸூக்கு   ஜாமீன் வழங்கியுள்ளார். நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் தினமும் அவர் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.   ஐபிஎல் போட்டி  தொடர்பான  வழக்குகளில் ஜாமின் கிடைத்தால் மட்டுமே கருணாஸ் சிறையில் இருந்து வெளிவர முடியும். இவ்வழக்கு  இன்று விசாரணைக்கு வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்