பெட்ரோல், டீசல் விலை உயர்வு : 5ம் தேதி ஆர்ப்பாட்டம் - ராமதாஸ் அறிவிப்பு
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து வரும் 5-ஆம் தேதி பாமக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 43 நாட்களில் பெட்ரோல் விலை 40 முறையும், டீசல் விலை 35 முறையும் உயர்த்தப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். கூடுதல் வரிகளைக் குறைத்தால், பெட்ரோல் டீசல் விலையை ஐந்து ரூபாய் வரை குறைக்க முடியும் என்றும் ராமதாஸ் யோசனை தெரிவித்துள்ளார்.
Next Story