அ.தி.மு.க. ஆட்சியை கலைக்க முயற்சி - அமைச்சர் தங்கமணி குற்றச்சாட்டு

திமுகவுடன் சேர்ந்து அதிமுக ஆட்சியை கலைக்க தினகரன் முயற்சிப்பதாக மின்துறை அமைச்சர் தங்கமணி குற்றம் சாட்டினார்.
அ.தி.மு.க. ஆட்சியை கலைக்க முயற்சி -  அமைச்சர் தங்கமணி குற்றச்சாட்டு
x
* திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் அண்ணாவின் பிறந்த நாளையொட்டி அதிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மழை காரணமாக தொண்டர்கள் கலைந்து சென்றனர். 

* கூட்டத்தில் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் , திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அதிமுக 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார். தொடர்ந்து பேசிய  மின்துறை அமைச்சர் தங்கமணி,  திமுகவுடன் சேர்ந்து அதிமுக ஆட்சியை கலைக்க தினகரன்  முயற்சிப்பதாக 
குற்றம் சாட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்