அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் : இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து தீர்மானம்

அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் சென்னை - ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் மாலையில் நடைபெற்ற கூட்டத்தில் இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் : இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து தீர்மானம்
x
* அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் சென்னை - ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் மாலையில் கூடியது. துணை முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர்செல்வம் மற்றும் முதலமைச்சரும் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி ஆகிய இருவர் தலைமையில் கூடிய இந்த கூட்டத்தில், அக்கட்சியின் எம்எல்ஏக்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

* தமிழகத்தில் தற்போது எழுந்துள்ள புதிய அரசியல் சூழல், வரவிருக்கும் திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்,  எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா ஏற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

* இலங்கை இறுதிக்கட்ட போரில் நிகழ்ந்த படுகொலையில்
திமுக - காங்கிரஸ் கட்சிகளை கண்டித்து, இதனை சர்வதேச போர் குற்றங்களாக கருதி, சம்பந்தப்பட்டவர்களை, போர் குற்றவாளிகளாக்கி தண்டிக்க வேண்டும் என வலியுறுத்தி, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


அதிமுக தீர்மானம் : "தந்தி டிவி" ராஜபக்சே பேட்டி எதிரொலி

அண்மையில் இந்தியா வந்திருந்த இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே, புதுடெல்லியில் தந்தி டிவிக்கு சிறப்பு பேட்டி அளித்திருந்தார். அப்போது,   இறுதிக்கட்ட போரில், இலங்கைக்கு இந்தியா உதவி செய்ததாக ராஜபக்சே தெரிவித்திருந்தார். இந்த சூழலில், திமுக - காங்கிரஸ் கட்சிக்கு எதிராகஅதிமுக கூட்டத்தில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்