ஹெச்.ராஜா உள்ளிட்ட 18 பேரை கைது செய்ய 2 தனிப்படைகள் அமைப்பு...

தடையை மீறி ஊர்வலம், காவல்துறை மற்றும் நீதிமன்றத்தை விமர்சித்த விவகாரம் தொடர்பாக பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா உள்ளிட்ட 18 பேரைக் கைது செய்ய 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
ஹெச்.ராஜா உள்ளிட்ட 18 பேரை கைது செய்ய 2 தனிப்படைகள் அமைப்பு...
x
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே  உள்ள மெய்யபுரத்தில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் பங்கேற்ற  ஹெச்.ராஜா போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது போலீசார் மற்றும்நீதிமன்றம் குறித்து அவர் ஆவேசமாக பேசுவது போன்ற வீடியோ  காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் அவர் தடையை மீறி விநாயகர் ஊர்வலம் நடத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து திருமயம் காவல் நிலையத்தில் ஹெச்.ராஜா உள்ளிட்ட 18 பேர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களைக் கைது செய்ய 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தடையை மீறி ஊர்வலம் சென்றது... காவல்துறையினரை பணிசெய்ய விடாமல் தடுத்தது... உள்ளிட்ட குற்றங்களுக்காக 143, 188, 353, 153 ஏ, 505, 501 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.Next Story

மேலும் செய்திகள்