அதிமுக நிர்வாகிகளுடன் முதல்வர் சந்திப்பு : தமிழக அரசியல் குறித்து முக்கிய ஆலோசனை

மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகளுடன், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, சென்னையில் முக்கிய ஆலோசனை நடத்தினார்.
அதிமுக நிர்வாகிகளுடன் முதல்வர் சந்திப்பு : தமிழக அரசியல் குறித்து முக்கிய ஆலோசனை
x
ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் மாலையில் இந்த கூட்டம் துவங்கியது. பல மணி நேரம் நீடித்த இந்த கூட்டத்தில்,  துணை முதலமைச்சர் ஒ. பன்னீர் செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி. முனுசாமி, வைத்திலிங்கம், மூத்த அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்தும், தற்போது, தமிழகத்தில் எழுந்துள்ள புதிய அரசியல் சூழ்நிலை குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் அமைச்சர்கள் 12 பேருக்கு கட்சி பொறுப்பு : பன்னீர்செல்வம், பழனிசாமி கூட்டாக அறிவிப்பு



இந்த கூட்டத்திற்கு பின் அதிமுகவிற்கு கூடுதல் நிர்வாகிகளும்,  சார்பு அமைப்புகளுக்கான புதிய நிர்வாகிகளையும் நியமித்து பன்னீர்செல்வம் மற்றும் பழனிசாமி கூட்டாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். இதன்படி, முன்னாள் அமைச்சர்கள் ப.​மோகன், பரஞ்ஜோதி உள்ளிட்ட  5 பேர் அமைப்புச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதிமுகவில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள வர்த்தக அணிக்கும், கலைப் பிரிவுக்கும் நிர்வாகிகளை நியமித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 12 முன்னாள் அமைச்சர்களுக்கு கட்சி பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. 


நாளையும், ஆலோசனை கூட்டம்  நடைபெறும்" - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் 



மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகளுடனான, ஆலோசனை கூட்டம் நாளையும் நடைபெறும் என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்