விஜய் மல்லையா விவகாரம் : திமுக தலைவர் ஸ்டாலின் கருத்து

விஜய் மல்லையா அருண் ஜெட்லி உடனான ரகசிய பேச்சுவார்த்தையை ‪பிரதமர் மோடி மக்களுக்கு விளக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
விஜய் மல்லையா விவகாரம் : திமுக தலைவர் ஸ்டாலின் கருத்து
x
ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் வங்கிக் கடன் மோசடி மன்னன் விஜய் மல்லையா நிதியமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்ததாக கூறியிருப்பதன் மூலம் பாஜக அரசு கார்ப்பரேட் முதலாளிகளின் கைப்பாவை என்பது நிரூபணமாவதாகக் குறிப்பிட்டுள்ளார். இருவர் இடையேயான அந்த ரகசிய பேச்சுவார்த்தையை மக்களுக்கு பிரதமர் மோடி விளக்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்