ஸ்டாலினுக்கு தலைவர்கள் வாழ்த்து...

திமுக தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஸ்டாலினுக்கு தலைவர்கள் வாழ்த்து...
x
ராகுல்காந்தி  டுவிட்டரில்  வாழ்த்து

திமுக தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஸ்டாலினுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். தமது டுவிட்டர் வலைப்பக்கத்தில், திமுகவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு, தனது "அரசியல் பயணத்தில், புதிய அத்தியாயத்தை தொடங்கி உள்ள ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள்" என ராகுல்காந்தி குறிப்பிட்டு உள்ளார். 

மம்தா பானர்ஜி டுவிட்டரில் வாழ்த்து

திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள  ஸ்டாலினுக்கு, மேற்கு வங்க முதலமைச்சரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, வாழ்த்து தெரிவித்துள்ளார். தமது டுவிட்டர் வலைப்பக்கத்தில், "திமுக தலைவராக பொறுப்பேற்ற ஸ்டாலினுக்கு தனது வாழ்த்துக்கள்" என பதிவிட்டுள்ளார்.இதுதவிர, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, த.மா.கா தலைவர் ஜி.கே. வாசன், பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, பாமக இளைஞர் அணி தலைவர்  அன்புமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் முத்தரசன், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் மற்றும்  நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் உள்ளிட்டோரும் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதேபோல, ஸ்டாலினுக்கு,  தொலைபேசி மூலம் நடிகர் ரஜினிகாந்த், வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்