திமுக தலைவரானார் ஸ்டாலின் - அரசியல் தலைவர்கள் கருத்து...
திமுக தலைவராக அறிவிக்கப்பட்ட ஸ்டாலினுக்கு தேசிய மற்றும் மாநில தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
திமுக தலைவராக அறிவிக்கப்பட்ட ஸ்டாலினுக்கு தேசிய மற்றும் மாநில தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது சமூக வலைதளபக்கத்தில் தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில், அரசியல் பயணத்தில் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ள ஸ்டாலின், வெற்றிகளை பெற வாழ்த்துவதாக குறிப்பிட்டுள்ளார். இதேபோல், மேற்கு வங்க முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, தனது சமூகவலைதள பக்கத்தில் ஸ்டாலினுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
ஸ்டாலினுக்கு அன்புமணி வாழ்த்து
திமுக தலைவராக பொறுப்பேற்றுள்ள ஸ்டாலின் மற்றும் அக்கட்சியின் பொருளாளராக பொறுப்பேற்றுள்ள துரைமுருகன் இருவருக்கும் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஸ்டாலினுக்கு சரத்குமார் வாழ்த்து
திமுக தலைவராக பொறுப்பேற்றிருக்கும் ஸ்டாலினுக்கு சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவரானார் ஸ்டாலின் - விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கருத்து...
Next Story