பிளாஸ்டிக் மாசில்லா விழிப்புணர்வு பிரசாரத்தை தொடங்கி வைத்தார்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு, விழிப்புணர்வு பிரசாரத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் மக்கள் ஓத்துழைப்பு அளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பிளாஸ்டிக் மாசில்லா விழிப்புணர்வு பிரசாரத்தை தொடங்கி வைத்தார்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
x
சென்னை தலைமை செயலகத்தில், நடைபெற்ற  பிரசார தொடக்க விழாவில் பேசிய  முதலமைச்சர் , பிளாஸ்டிக் மாசில்லா தமிழகத்தை உருவாக்க பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொண்டார். 

மக்காத பிளாஸ்டிக் பயன்படுத்துவதை மக்கள் தவிர்க்க வேண்டும் என வலியுறுத்திய முதலமைச்சர், அமைச்சர்கள் பிளாஸ்டிக் கோப்புகளுக்கு பதிலாக காகித கோப்புகளை பயன்படுத்துவார்கள் எனக் கூறினார். 

இதனைதொடர்ந்து, விழிப்புணர்வு குறும்படம், வலைதளம், செயலி,  குறியீடுகளை முதலமைச்சர் அறிமுகம் செய்தார். பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு பிரசாரத்தின் விளம்பர தூதராக நடிகர்கள் விவேக்,சூர்யா, கார்த்தி, ஜோதிகா ஆகியோரை அரசு நியமனம் செய்துள்ளது. 

அரசின் இலவச சைக்கிள் திட்டம் 10 மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கினார் முதலமைச்சர் நடப்பு கல்வியாண்டில், 11 லட்சத்து 78 ஆயிரம் மாணவ- மாணவியர்களுக்கு அரசின் இலவச சைக்கிள் வழங்கப்பட உள்ளது. முதல்கட்டமாக  10 பள்ளி மாணவர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சைக்கிள் வழங்கினார். 

Next Story

மேலும் செய்திகள்