"வாஜ்பாய் உணர்வுகள் நமக்கு வழிகாட்டும்" - பிரதமர் மோடி உருக்கம்

புதிய இந்தியாவை நாம் உருவாக்க வாஜ்பாய் உணர்வுகள் நமக்கு தொடர்ந்து வழிகாட்டும் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
வாஜ்பாய் உணர்வுகள் நமக்கு வழிகாட்டும் - பிரதமர் மோடி உருக்கம்
x
வாஜ்பாய் மறைவையொட்டி பிரதமர் மோடி கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அனைவரிடமும் தாக்கத்தையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தக்கூடிய மனிதர்களில் முதலானவராக மிகவும் அரிதானவராக வாஜ்பாய் இருந்தார் என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். மக்களோடு இயல்பாக தொடர்பு கொள்ளும் அரிய திறனோடும், குழப்பமான பிரச்சினைகளை, எளிமையாக கையாளக்கூடியவராகவும் வாஜ்பாய் திகழ்ந்தார் என மோடி தெரிவித்துள்ளார்.

1990களின் மையப்பகுதியில் பொருளாதாரத்தை வாஜ்பாய் மீட்டெடுத்தார் என்று குறிப்பிட்டுள்ள மோடி, கடந்த 20 ஆண்டுகளில் நாம் கண்ட பெரும்பாலான பொருளாதார வெற்றிக்கு அவர் வித்திட்டார் என்றும் தெரிவித்துள்ளார். 21ஆம் நூற்றாண்டில் உலக அளவிலான தலைமைப் பொறுப்பை ஏற்க இந்தியா தயாராவதற்கான அடித்தளத்தை வாஜ்பாய் அமைத்தார் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். அடுத்த தலைமுறைக்கான உள்கட்டமைப்பு, சாலைகள் மற்றும் தொலைத்தொடர்பிற்கு வாஜ்பாய் முன்னுரிமை கொடுத்ததாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

ஜம்மு-காஷ்மீரின் காயங்களை குணப்படுத்துவதிலும், கார்கில் போரில் வெற்றிப் பெறுவதிலும் வாஜ்பாய் உறுதியாக இருந்தார் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நமது நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட போது இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதத்தின் காரணி யார் என்பதை உலகிற்கு வாஜ்பாய் உணர வைத்தார் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார் தனிப்பட்ட முறையில் தன் மீது வாஜ்பாய் வைத்த நம்பிக்கை மிகவும் பெருமைக்குரியது என்றும் மோடி தெரிவித்துள்ளார்.

வாஜ்பாய், உண்மையிலேயே பாரதத்தின் ரத்னாவாக இருந்தார் என்றும், புதிய இந்தியாவை நாம் உருவாக்க அவரது உணர்வுகள் நமக்கு தொடர்ந்து வழிகாட்டும் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்