வாஜ்பாய் மறைவு : தமிழக தலைவர்கள் இரங்கல்

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் பழனிச்சாமி, துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம், திமுக செயல் தலைவர் ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் டெல்லி புறப்பட்டுச் சென்றனர்.
வாஜ்பாய் மறைவு : தமிழக தலைவர்கள் இரங்கல்
x
"வாஜ்பாய் தனது வாழ்வை நாட்டிற்காகவே அர்ப்பணித்தவர்" - முதலமைச்சர் பழனிசாமி

வாஜ்பாய் மறைவு குறித்து முதலமைச்சர் பழனிசாமி தமது இரங்கல் செய்தியில்,  சிறந்த பேச்சாளராகவும், சிறந்த ஆட்சியாளராகவும், கடின உழைப்பாளியாகவும், அனைவரிடமும் அன்பாக பழகும் தன்மையுடையவராக வாஜ்பாய் இருந்தார் என தெரிவித்துள்ளார். தனது வாழ்வை நாட்டிற்காகவே அர்ப்பணித்தவர் என குறிப்பிட்டுள்ள முதலமைச்சர்  பழனிசாமி, முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் குடும்பத்திற்கும், பாஜக தொண்டர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாக தமது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

"வாஜ்பாய் மறைவு இந்திய தேசத்திற்கே பேரிழப்பு" - ஸ்டாலின்



திமுக செயல் தலைவர்  ஸ்டாலின் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், கொள்கை வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு, கருணாநிதியிடம் நட்பு பாராட்டிய தலைவர் வாஜ்பாய் என குறிப்பிட்டுள்ளார். "National Agenda for Governance" என்ற ஒரு செயல் திட்டத்தை உருவாக்கி, திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் பிரதமர் பதவியில் சிறப்பாகப் பணியாற்றி நிலையான போற்றத் தகுந்த ஆட்சியை நாட்டுக்கு வழங்கியதாகவும் ஸ்டாலின் தமது இரங்கல் செய்தியில் புகழாரம் சூட்டி உள்ளார்.

"லஞ்சம் ஊழலுக்கு அப்பாற்பட்ட தலைவர்" - விஜயகாந்த்



முன்னாள் இந்திய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் மறைவிற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். வாஜ்பாய் காலமான செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சியும், மன வேதனையும் அடைந்ததாக இரங்கல் செய்தியில் அவர் குறிப்பிட்டு உள்ளார். லஞ்சம் ஊழலுக்கு அப்பாற்பட்ட தலைவராகவும், அனைத்துக் கட்சியினராலும் பாராட்டப்பட்ட தலைவர் என்றும் வாஜ்பாய்க்கு விஜயகாந்த் புகழாரம் சூட்டி உள்ளார். 

"நாட்டிற்கு தன்னை முழுமையாக அர்ப்பணித்து கொண்ட மகத்தான மனிதர் வாஜ்பாய்" - ஜி.கே. வாசன்



அரசியல், ஆன்மீகம், அறிவியல், இலக்கியம், எழுத்து, நிர்வாகம் என பல்வேறு துறைகளில் திறமை மிக்கவராக விளங்கிய பன்முகத்திறன் கொண்ட வாஜ்பாய், வரலாற்றில் தனக்கென்று ஓர் தனி இடம் பிடித்தவர் என்று,  தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். நாட்டிற்கு தன்னை முழுமையாக அர்ப்பணித்து கொண்ட மகத்தான மனிதர் என்றும் ஜி.கே. வாசன் தமது இரங்கல் செய்தியில் பெருமிதம் தெரிவித்துள்ளார். மேலும் பாஜகவினருக்கும், அவரது குடும்பத்தாருக்கும் த.மா.கா சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார். 

"உலகெங்கிலும் இந்தியாவின் பெயர் ஒலிக்கச் செய்தவர் வாஜ்பாய்" - சரத்குமார்



வாஜ்பாய்யின் தேச பக்தி மிகுந்த தொலைநோக்கு சிந்தனைகளும், திட்டங்களும் மக்களால் என்றும் போற்றத்தக்கவை என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டை அணு ஆயுத நாடாக அறிவித்து உலகெங்கிலும் இந்தியாவின் பெயர் ஒலிக்கச் செய்தவர் என்றும் சரத்குமார் குறிப்பிட்டுள்ளார்.

 "வாஜ்பாய் மரணத்தை ஏற்க மனம் மறுக்கிறது" - எச்.ராஜா

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் மரணத்தை ஏற்க மனம் மறுப்பதாக பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.


"மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மிகச் சிறந்த மனிதர்" - தமிழக ஆளுநர் பன்வாரிலால் புராஹித் 


"மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மிகச் சிறந்த மனிதர்" - தமிழக ஆளுநர் பன்வாரிலால் புராஹித் 


"வாஜ்பாய் மறைவு மிகப்பெரிய இழப்பு" - கி.வீரமணி 



கொள்கையால் மாறுபட்டாலும்கூட அவரது இனிய சுபாவம், பழகும் பண்பு அனைவருக்கும் எடுத்துக்காட்டு என்று வாஜ்பாய்க்கு, திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி புகழாரம் சூட்டியுள்ளார். மாற்றாரை மதிக்கும் பண்பும் கொண்ட மனிதநேயமிக்க ஒருவரை, இந்திய பொதுவாழ்வு இழந்து விட்டதாக அவர் குறிப்பிட்டு உள்ளார். வாஜ்பாயின் மறைவு மிகப்பெரிய இழப்பு என்று தமது இரங்கல் செய்தியில் கி. வீரமணி குறிப்பிட்டுள்ளா​ர்.

"இமயமே சரிந்தது போன்ற உணர்வில் உள்ளோம்" - தமிழிசை சவுந்திரராஜன் 


Next Story

மேலும் செய்திகள்