"உத்தரப்பிரதேச முதலமைச்சரை மையமாக வைத்து தயாரான படம்"

கோரக்பூர் மடம் மற்றும் ஆதித்தியநாத் வாழ்க்கையை தவறாக சித்தரிக்கும் வகையில் படம் தயாரிக்கப்பட்டு உள்ளதாக பா.ஜ.க. நிர்வாகி அளித்த புகாரில் இயக்குநர் உள்பட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
உத்தரப்பிரதேச முதலமைச்சரை மையமாக வைத்து தயாரான படம்
x
பல்வேறு பிரபலங்களின் வாழ்க்கை வரலாறுகள் திரைப்படமாக தயாரிக்கப்பட்டு வரும் நிலையில், உத்தரப்பிரதேச முதலமைச்சர் ஆதித்யநாத்தின் வாழ்க்கையும் ஜிலா கோரக்பூர் என்ற பெயரில் திரைப்படமாக தயாராகி உள்ளது. இந்த படத்தின் முதல் தோற்றம் வெளியான நிலையில் சர்ச்சை எழுந்துள்ளது. கோரக்பூர் மடம் மற்றும் ஆதித்தியநாத் வாழ்க்கையை தவறாக சித்தரிக்கும் வகையில் படம் தயாரிக்கப்பட்டு உள்ளதாக பா.ஜ.க. நிர்வாகிகள் புகார் அளித்து வருகின்றனர். இந்நிலையில், ​பா.ஜ.க. நிர்வாகி ஐ.பி.சிங் அளித்த புகாரின் பேரில் இயக்குநர் வினோத் திவாரி உள்ளிட்ட 7 பேர் மீது போலீசார் வழ​க்கு பதிவு செய்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்