அசாம் வரைவு பட்டியல் விவகாரம் - ராஜிவ்காந்தி மீது அமித் ஷா புகார்

அசாம் குடிமக்கள் வரைவு பட்டியல் குறித்து மாநிலங்களவையில் கடுமையான விவாதம் நடைபெற்றது.
அசாம் வரைவு பட்டியல் விவகாரம் - ராஜிவ்காந்தி மீது அமித் ஷா புகார்
x
அசாம் குடிமக்கள் வரைவு பட்டியல் குறித்து மாநிலங்களவையில் கடுமையான விவாதம் நடைபெற்றது. பட்டியலில் 40 லட்சம் பேரின் பெயர்கள் இல்லை என காங்கிரஸ் எம்.பி.க்கள் கூறினர். அப்போது விவாதத்தில் பேசிய பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா 1985ம் ஆண்டு பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி இது தொடர்பான கோப்பில் கையெழுத்திட்டதாகவும் அப்போது செய்யாததை தற்போதைய அரசு செய்வதாகவும் கூறினார். 

மேலும், உச்ச நீதிமன்ற மேற்பார்வையில் தயாரிக்கப்பட்ட பட்டியலை எதிர்ப்பது ஏன் எனவும், வங்கதேச அகதிகளுக்கு காங்கிரஸ் உதவி செய்வதாகவும் கூறினார். இதற்கு காங்கிரஸ் எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், அமளி ஏற்பட்டு மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது. 


Next Story

மேலும் செய்திகள்