"பிரதமரை எதிர்ப்போம் ஆனால் வெறுக்க மாட்டோம்" - ராகுல் காந்தி

பிரதமர் மோடியையும்,பா.ஜ.க.வையும் காங்கிரஸ் எதிர்க்கும்,ஆனால் வெறுக்காது என்று அக்கட்சியின் தேசிய தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
பிரதமரை எதிர்ப்போம் ஆனால் வெறுக்க மாட்டோம் - ராகுல் காந்தி
x
டெல்லியில் நேற்று நடந்த ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய ராகுல் காந்தி, நீங்கள் உங்கள் மனதில் யாரோடு வேண்டுமானாலும் போராடலாம், ஆனால் வெறுப்பு என்பது ஒரு விருப்பமாக தான் இருக்கும் என்று குறிப்பிட்டார். இப்போதெல்லாம்,பாஜக எம்.பி.க்கள் தன்னை கண்டால் கட்டிப்பிடித்து விடுவேன் என்ற பயத்தில் 2 அடி பின்னால் செல்கின்றனர் என்று நகைச்சுவையாக கூறினார்.பிரதமரையும், பாஜகவையும் விமர்சித்தாலும் அவர்களை வெறுக்க மாட்டோம் என்றும் ராகுல் காந்தி தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்