லோக்பால் தேர்வு குழு கூட்டதை காங்கிரஸ் புறக்கணித்ததால், அமைப்பை உருவாக்குவதில் தொடர்ந்து தாமதம்.

லோக்பால் தேர்வு குழு கூட்டதை காங்கிரஸ் புறக்கணித்ததால், லோக்பால் அமைப்பை உருவாக்குவது தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
லோக்பால் தேர்வு குழு கூட்டதை காங்கிரஸ் புறக்கணித்ததால், அமைப்பை உருவாக்குவதில் தொடர்ந்து தாமதம்.
x
மத்திய அமைச்சர்கள், மத்திய அரசு அதிகாரிகள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் சுயேட்சையான அமைப்பு, லோக்பால்.2013-ல் காங்கிரஸ் ஆட்சியில் இதற்கான மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையிலும், கடந்த ஐந்து ஆண்டுகளாக லோக் பால் அமைக்கப்படவில்லை.லோக்பாலை தேர்வு செய்ய பிரதமர், மக்களவை சபாநாயகர், மக்களவை எதிர்கட்சித் தலைவர் மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகிய நான்கு பேர் அடங்கிய தேர்வு குழு அமைக்கப்பட வேண்டும்.கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 44 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்ற காங்கிரஸ், பிரதான எதிர்கட்சி என்ற தகுதியை பெறவில்லை.

இதனால், தேர்வு குழு செயல்பட முடியாத நிலையில், லோக்பால் சட்டத்தை திருத்த ஒரு புதிய மசோதா 2014 டிசம்பரில் அறிமுகம் செய்யப்பட்டது.இதன்படி, அதிக எம்.பிக்கள் கொண்ட எதிர்கட்சியின் தலைவரை, தேர்வு குழுவின் உறுப்பினராக சேர்க்க வகை செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த சட்டத் திருத்தம் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. எனவே மக்களவை காங்கிரஸ் தலைவராக இருக்கும் மல்லிகார்ஜூன கார்கேவிற்கு சிறப்பு அழைப்பாளர் என்ற பெயரில், தேர்வு குழு கூட்டங்களுக்கு அழைப்பு அனுப்பட்டு வருகிறது.இதை ஏற்க மறுத்து வரும் கார்கே, கடந்த வியாழக்கிழமை நடந்த மல்லிகார்ஜூன லோக்பால் தேர்வு குழு  கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இதனால் லோக்பால் அமைக்கப்படுவது தொடர்ந்து தாமதமாகி வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்