பிள்ளைகளின் மீது பெற்றோர் கவனம் செலுத்துவது அவசியம் - திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்

சென்னையில் சிறுமி பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்திற்கு திமுக செயல்தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பிள்ளைகளின் மீது பெற்றோர் கவனம் செலுத்துவது அவசியம் - திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்
x
திமுக தொண்டர்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில், தமிழகத்தில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இருக்கிறதா என்ற கேள்வி எழுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

சிறுமிகளுக்கும், பெண்களுக்கும் எதிரான பாலியல் வன்முறை நிகழ்வுகளைத் தடுத்திடும் வகையில் கடுமையான சட்டம் இயற்றப்பட வேண்டும் என்றும், குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். 

பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் மீது உரிய கவனம் செலுத்துவதால் பாலியல் குற்றங்களை தடுக்க முடியும் என ஸ்டாலின் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்