யூ.ஜி.சி. மூலம் தமிழகம் பெற்று வந்த உரிமைகள் பறிபோகாமல் இருக்க நடவடிக்கை - அமைச்சர் அன்பழகன் உறுதி

உயர்கல்வி ஆணையத்திற்கு நிதி வழங்கும் அதிகாரம் இல்லாததால், தமிழகத்திற்கு சிக்கல் - ஸ்டாலின்
யூ.ஜி.சி. மூலம் தமிழகம் பெற்று வந்த உரிமைகள் பறிபோகாமல் இருக்க நடவடிக்கை - அமைச்சர் அன்பழகன் உறுதி
x
யு.ஜி.சி-க்கு பதிலாக உயர்கல்வி ஆணையம் மைக்கப்படும் விவகாரத்தில்  தமிழகத்தின் உரிமைகள் பறிபோகாமல் இருக்க, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பழகன் உறுதியளித்துள்ளார்.

* சட்டப்பேரவையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், யூ.ஜி.சி., எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழுவிற்கு பதிலாக, உயர்கல்வி ஆணையம் அமைக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார்.

 * உயர்கல்வி ஆணையத்திற்கு நிதி வழங்கும் அதிகாரம் இல்லாததால், தமிழகத்திற்கு வழங்கப்படும் நிதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார். 

* அதற்கு பதில் அளித்து பேசிய, உயர்க்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், உயர்கல்வி ஆணையம் 

தொடர்பான கருத்துக்களை ஜூலை 7ஆம் தேதிக்குள் தெரிவிக்க அனைத்து மாநில அரசுகளையும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளதாக தெரிவித்தார்.

* உயர் கல்வி ஆணையம் தொடர்பாக தமிழக அரசு ஆய்வு செய்து வருவதாகவும், 13 பல்கலைக்கழக துணைவேந்தர்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார்.

* யூ.ஜி.சி., அமைப்பின் மூலம் தமிழகம் பெற்று வந்த உரிமைகள் பறிபோகாமல் இருக்க, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் அன்பழகன் உறுதியளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்