18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: 3-வது நீதிபதி முன் இன்று விசாரணை

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கு மூன்றாவது நீதிபதி முன் விசாரணைக்கு வர உள்ளது​.
18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: 3-வது நீதிபதி முன் இன்று விசாரணை
x
தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி சுந்தர் அமர்வு மாறுபட்ட தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து,  3 வது நீதிபதிக்கு வழக்கு மாற்றப்பட்டது.  இதற்கான நீதிபதியாக விமலா  நியமிக்கப்பட்டார். இதனை எதிர்த்து தகுதி நீக்கப்பட்ட 17 எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், நீதிபதி சத்தியநாராயணனை 3-வது நீதிபதியாக நியமித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில், இந்த வழக்கு, 3-வது நீதிபதி சத்தியநாராயணன் முன்பு  மாலை 4 மணிக்கு, விசாரணைக்கு பட்டியலிடப்பட்டு உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்