திமுகவின் சவாலை ஏற்றார், அமைச்சர் காமராஜ்

ரேஷன் கடைகளில் எந்தவொரு பிரச்சினையும் இல்லை என்றும் உணவு அமைச்சர் காமராஜ் திட்டவட்டமாக தெரிவித்தார்.
திமுகவின் சவாலை ஏற்றார், அமைச்சர் காமராஜ்
x
பொது விநியோக கடைகளில் தன்னுடன் சேர்ந்து ஆய்வு நடத்த தயாரா என திமுக உறுப்பினர் கும்பகோணம் அன்பழகன் விடுத்த சவாலை, உணவு அமைச்சர் காமராஜ் ஏற்றுக்கொண்டார். உணவு மானிய கோரிக்கை மீதான விவாத்தில் பேசிய அன்பழகன், எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல், அமைச்சர் ஆய்வு செய்தால், உண்மை நிலை தெரிய வரும் என்றார். இதற்கு பதிலளித்த அமைச்சர், எந்த தொகுதியாக இருந்தாலும் ஆய்வு நடத்த தயார் என்றார். ரேஷன் கடைகளில் எந்தவொரு பிரச்சினையும் இல்லை என்றும் உணவு அமைச்சர் காமராஜ் திட்டவட்டமாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்