"சட்டப்பேரவையில் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் தரவில்லை" - திமுக செயல் தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

சட்டமன்ற கூட்டத்தொடரில், தான் கேட்ட எந்த கேள்விக்கும் உரிய பதில் அளிக்கப்படவில்லை என்று எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் எழுப்பிய  கேள்விகளுக்கு பதில் தரவில்லை - திமுக செயல் தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
x
சட்டமன்ற கூட்டத்தொடரில், தான் கேட்ட எந்த கேள்விக்கும் உரிய பதில் அளிக்கப்படவில்லை என்று எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக திமுக தொண்டர்களுக்கு அவர் எழுதி உள்ள கடிதத்தில், நடிகர் எஸ்.வி.சேகர் விவகாரம் குறித்து கடந்த 13ஆம் தேதி பேரவை கூட்டத்தில் கேட்டபோது, விவாதிக்க கூட அனுமதிக்கப்படவில்லை என்றும், 25 ஆம் தேதி, ஆளுநர் பற்றி விவாதிக்க கேட்டபோது, அதற்கும் அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

26 ஆம் தேதி காவல்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தின் போது, போலீஸ் கமிஷன் அமைக்க வலியுறுத்தியும், முதலமைச்சர் தனது பதிலுரையில் அறிவிக்கவில்லை என குற்றம்சாட்டி உள்ளார். தமிழகத்தில் இரட்டை ஆட்சி நடப்பதாக 27ஆம் தேதி, சட்டப்பேரவையில் ஆதாரத்துடன் எடுத்துரைத்தும், எவ்வித பயனும் இல்லை என்று குறிப்பிட்டுள்ள ஸ்டாலின்,

28ஆம் தேதி ஆற்றிய உரையில், நீட் மசோதாவின் தற்போதைய நிலை குறித்து விளக்கம் கேட்டதற்கு, முதலமைச்சரிடம் இருந்தோ, சுகாதார அமைச்சரிடம் இருந்தோ பொருத்தமான பதில் கிடைக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். இப்படி அடுக்கடுக்கான கேள்விகளை பேரவை கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் எழுப்பி உள்ளதாகவும், ஆனால் எந்த கேள்விக்கும் உரிய பதில் கிடைக்கவில்லை எனவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்