இருப்பதை வைத்து மகிழ்ச்சியாக இருப்போம் - தோப்பு வெங்கடாசலத்துக்கு திண்டுக்கல் சீனிவாசன் பதில்

இருப்பதை வைத்து மகிழ்ச்சியாக இருப்போம் என சட்டப்பேரவையில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இருப்பதை வைத்து மகிழ்ச்சியாக இருப்போம் - தோப்பு வெங்கடாசலத்துக்கு திண்டுக்கல் சீனிவாசன் பதில்
x
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது, பேசிய பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் தோப்பு வெங்கடாச்சலம், விஜயமங்கலம் அருகே உள்ள அக்னீஸ்வரர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் என்றும், சித்தர்கள் வாழ்ந்த இந்த கோவிலில் வழிபாடு நடத்தினால் கேட்டது கிடைக்கும் எனவும் தெரிவித்தார். 

அமைச்சரும் இந்த கோவிலுக்கு வந்து வேண்டினால் கேட்டது கிடைக்கும் என கூறினார். மேலும், இந்த கோவிலை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வெங்கடாச்சலம் வலியுறுத்தினார். அதற்கு பதிலளித்து பேசிய வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், எம்.ஜி.ஆர். பாடலை சுட்டிக்காட்டி, இருப்பதை வைத்து மகிழ்ச்சியாக இருப்போம் என்றும், மேலும் கேட்டது கிடைக்கும் என்பதில் தனக்கு நம்பிக்கை இல்லை எனவும் கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்