தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 13 பேருக்கு நினைவேந்தல் கூட்டம் : கட்சிகள், பொதுநல அமைப்பினர் பங்கேற்பு
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 13 பேருக்கு நினைவேந்தல் கூட்டம், சென்னையில் நடைபெற்றது.
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 13 பேருக்கு நினைவேந்தல் கூட்டம் : கட்சிகள், பொதுநல அமைப்பினர் பங்கேற்பு
தூத்துக்குடியில் இரவு நேர கைதுகள் நடக்கிறது - டி.கே.எஸ்.இளங்கோவன்

தூத்துக்குடியில் இரவு நேர கைதுகள் நடக்கிறது. போராடுவோரை அச்சுறுத்துவது தவறு. சேலம் மக்களின் போராட்டம் அரசுக்கு எச்சரிக்கை.
1994-முதல் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராட்டம் - நல்லகண்ணு

1994-முதல் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது. 24 ஆண்டுகளாக வேறு வேறு விதமாக நடக்கிறது, புதிதாக நடக்கவில்லை; இது மக்கள் போராட்டம்.
அரசுக்கு எதிராக போராடுவோரை கைது செய்கின்றனர் - ஜி.ராமகிருஷ்ணன்

8 வழி சாலைக்கு எதிராக போராடுவோரை மிரட்டுகின்றனர். அரசுக்கு எதிராக போராடுவோரை கைது செய்கின்றனர். இது, ஜனநாயகத்துக்கு ஆபத்தான செயல்.
13 பேர் கொல்லப்பட்ட பின், தமிழகம் அமைதியாகிவிட்டது - திருமாவளவன்

ஜல்லிக்கட்டுக்காக மிகப்பெரிய போராட்டம் நடத்தப்பட்டது. தூத்துக்குடி 13 பேர் கொல்லப்பட்ட பின், தமிழகம் அமைதியாகிவிட்டது, இதைத்தான் ஆளும் வர்க்கம் எதிர்பார்க்கிறது
Next Story