பொதுக்கூட்டத்தால் சேதமான நடைபாதையை சரி செய்த திமுக!

சமூக வலைதளங்களில் எழுந்த புகாரை அடுத்து திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் நடவடிக்கை
பொதுக்கூட்டத்தால் சேதமான நடைபாதையை சரி செய்த திமுக!
x


கடந்த சனிக்கிழமை இரவு, திமுக தலைவர் கருணாநிதியின் 95வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சென்னை அண்ணா நகரில் நடைபெற்றது. இதற்கான கட்சி கொடிகள் மற்றும் கட்-அவுட்டுகள் வைக்க சென்னை மெட்ரோ ரயில் சார்பில் புதிதாக போடப்பட்ட கிரனைட் நடைபாதைகள் சேதம் செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இது பற்றி பதிவு செய்த அரப்போர் இயக்கம், பூந்தமல்லி சாலையில் சேதமடைந்த நடைபாதையின் புகைப்படத்தையும் வெளியிட்டது.
 

இந்த பதிவிற்கு பதிலளித்த திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன், சேதமடைந்த பகுதிகளை திராவிட முன்னேற்றக் கழகமே சரி செய்யும் என்றும், இது போன்றும் சம்பவங்கள் இனி நிகழாமல் பார்த்துக்கொள்வதாகவும் உறுதியளித்தார்.
மற்றொரு பதிவில், இது ஒப்பந்ததாரர் செய்த தவறு என்று விளக்கமளித்த அன்பழகன், இந்த கூட்டத்திற்கு பொறுப்பாளர் என்ற அடிப்படையில் இதை சரி செய்வதற்கு பொறுப்பேற்பதாகவும் தெரிவித்தார். அதை தொடர்ந்து, இன்று காலை திமுக சார்பில் நடைபாதையை சிமெண்ட் பூசி சரி செய்யும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார் ஜெ.அன்பழகன்.
மக்களுக்கு ஏற்பட்ட இடையூறுக்கு வருந்துவதாகவும், ஒப்பந்ததாரர்கள் இது போன்ற தவறை இனி செய்யாமல் பார்த்துக்கொள்வேன் என்றும் தனது பதிவில் அன்பழகன் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்