அ.தி.மு.க. கட்சி விதி 46-ல் திருத்தம்? - இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட உள்ளதாக தகவல்

அ.தி.மு.க. கட்சியின் விதி 46-ஐ திருத்தி மீண்டும் தாக்கல் செய்ய இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அ.தி.மு.க. கட்சி விதி 46-ல் திருத்தம்? - இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட உள்ளதாக தகவல்
x
அதிமுகவில், பொதுச்செயலாளருக்கு பதிலாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் ஏற்படுத்தப்பட்டு, புதிய சட்டவிதிகள் உருவாக்கப்பட்டன. இவை, தலைமை தேர்தல் ஆணைய அலுவலகத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டது. இதனையடுத்து, புதிய விதிகளை ஏற்றுக்கொண்ட இந்தியத் தேர்தல் ஆணையம், அதனை இணையதளத்திலும் வெளியிட்டது. 

இந்நிலையில், அ.தி.மு.க. கட்சியின் விதி 46-ஐ திருத்தி மீண்டும் தாக்கல் செய்ய இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.பொதுச்செயலாளர் பதவி தொடர்பாக, திருத்தப்பட்ட சட்டவிதி கடந்த 1976ஆம் ஆண்டு நவம்பர் 1 முதல் அமலில் வரும் என்ற பொருளில் உள்ளதால், அதனை திருத்த திட்டமிடப்பட்டுள்ளது.

பொதுச்செயலாளர் பதவி இனி இல்லை என்ற சட்டவிதியில் மாற்றம் கொண்டு வரப்பட்டு, 1976ஆம் ஆண்டு முதல் அமல் என்றால் எம்.ஜி.ஆர்.,ஜெயலலிதா வகித்த பதவி கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்