“உணவு தேவையென்றால் வெளியே செல்லுங்கள்“ - 18 மணி நேரம் பட்டினி... திருப்பதியில் பக்தர்கள் அவதி

திருப்பதி ஏழுமலையான் கோவில் இலவச தரிசனத்தில் சென்ற பக்தர்களுக்கு இரவு முதல் பகல் 12 மணி வரை உணவு வழங்காததால் பக்தர்கள் அவதிக்குள்ளாகினர்.
x
திருப்பதி ஏழுமலையான் கோவில் இலவச தரிசனத்தில் சென்ற  பக்தர்களுக்கு இரவு முதல் பகல் 12 மணி வரை உணவு வழங்காததால் பக்தர்கள் அவதிக்குள்ளாகினர். திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாள்தோறும் 60 முதல் 70 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதனால் இலவச தரிசனத்தில் செல்லும் பக்தர்கள்  10 முதல் 24 மணி நேரம் வரை காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் 12 மணி வரை 18 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்த பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் வழங்கப்படும் உணவு மற்றும் பால் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் வயதானவர்களும், குழந்தைகளும் சிரமத்திற்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டது. மேலும் இது குறித்து கேட்டபோது, உணவு தேவையென்றால் வெளியே சென்றுவிடுங்கள் என தேவஸ்தான அதிகாரிகள் அலட்சியமாக பதில் அளித்ததாக பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்