ஞானவாபி மசூதி வழக்கு - இன்று விசாரணை

உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, ஞானவாபி மசூதி வழக்கு விசாரணையை வாராணசி மாவட்ட நீதிமன்ற நீதிபதி அஜய கிருஷ்ண விஷ்வேஷா இன்று தொடங்குகிறார்.
x
உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, ஞானவாபி மசூதி வழக்கு விசாரணையை வாராணசி மாவட்ட நீதிமன்ற நீதிபதி அஜய கிருஷ்ண 
விஷ்வேஷா இன்று தொடங்குகிறார்.

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகே இஸ்லாமிய மதவழிபாட்டு தலமான ஞானவாபி மசூதி உள்ளது. இங்கு சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்ட பகுதியை பாதுகாக்கவும், இஸ்லாமியர்கள் வழிபாடு மேற்கொள்ளவும் கடந்த 17ம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவு 8 வாரங்களுக்கு அமலில் இருக்கும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும். வாராணசி சிவில் நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணையை, மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றியும் ஆணையிட்டது.  இந்த வழக்கை அனுபவம் வாய்ந்த மாவட்ட  நீதிபதி விசாரிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், ஞானவாபி மசூதி உரிமையியல் வழக்கு விசாரணையை வாராணசி மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதி அஜய கிருஷ்ண 
விஷ்வேஷா இன்றுதொடங்குகிறார்.


Next Story

மேலும் செய்திகள்