ஞானவாபி மசூதி விவகாரம் - இன்று விசாரணை

வாரணாசி ஞானவாபி மசூதியில் ஆய்வுக்கு எதிரான மேல்முறையீடு மனுவை உச்சநீதிமன்றம் செவ்வாய்கிழமை விசாரிக்கிறது.
x
வாரணாசி ஞானவாபி மசூதியில் ஆய்வுக்கு எதிரான மேல்முறையீடு மனுவை உச்சநீதிமன்றம் செவ்வாய்கிழமை விசாரிக்கிறது. ஞானவாபி மசூதியில் நடத்தப்பட்டுவரும் கள ஆய்வை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்ற வாராணசி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவுக்கு எதிரான மேல்முறையீடு மனுவை உச்சநீதிமன்ற நீதிபதி டி. ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரிக்கிறது. இதனிடையே, ஞானவாபி மசூதியில் ஆய்வின்போது சிவலிங்கம் கண்டறியப்பட்டுள்ளதாக வழக்குரைஞர் ஆணையர் வாராணசி நீதிமன்றத்தில் தெரிவித்ததை தொடர்ந்து, அந்தப் பகுதியை சீல் வைக்கவும், மேலும் அந்த பகுதிக்கு போதுமான பாதுகாப்பை வழங்க மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர், சிஆர்பிஎஃப் படைப் பிரிவு தலைவர் ஆகியோருக்கு வாராணசி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்