விவாகரத்து பிறகு ஒன்றாக வாழ்ந்த இருவர்.. சந்தேகத்தால் ஏற்பட்ட விபரீதம் - அனாதையான குழந்தை

கேரள மாநிலம் நெடுமங்காடு பகுதியை சேர்ந்த அபிலாஷ் என்பவரும், திருமணமாகி விவாகரத்து பெற்ற, 6 வயது மகனின் தாயான பிந்து என்பவரும், திருமணம் செய்துகொள்ளாமல் மூன்று வருடங்களாக ஒன்றாக வசித்து வந்துள்ளனர்.
x
கேரள மாநிலம் நெடுமங்காடு பகுதியை சேர்ந்த அபிலாஷ் என்பவரும், திருமணமாகி விவாகரத்து பெற்ற, 6 வயது மகனின் தாயான பிந்து என்பவரும், திருமணம் செய்துகொள்ளாமல் மூன்று வருடங்களாக ஒன்றாக வசித்து வந்துள்ளனர். ஓராண்டிற்கு முன்னர் அபிலாஷுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை கிடைத்துள்ளது. இதனையடுத்து அங்கு சென்ற அபிலாஷ், மீண்டும் கேரளா திரும்பி பிந்துவை சந்தித்துள்ளார். அப்போது பிந்து, தன்னை விட்டுவிட்டு வேறு பெண்ணை அபிலாஷ் திருமணம் செய்துகொள்வார் என சந்தேகமடைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், பிந்து திடீரென தனது உடலிலும் அபிலாஷ் மீதும் தனது மகன் மீதும், மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்துள்ளார். இதில்அவரது மகன் வீட்டைவிட்டு வெளியே ஓடி தப்பிய நிலையில், பிந்துவும், அபிலாஷும் உடல் கருகி உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்