அசானி புயலால் கனமழை எச்சரிக்கை

அசானி புயலால் ஒடிசா கடற்கரையோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என புவனேஷ்வர் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
x
அசானி புயலால் ஒடிசா கடற்கரையோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என புவனேஷ்வர் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தீவிர புயலாக மாறியுள்ள அசானி, நாளை இரவு மத்திய மேற்கு வங்க‌க் கடலை அடைந்து, வடமேற்கு நோக்கி நகர்ந்து வடக்கு ஆந்திரா மற்றும் ஒரிசா கடற்கரையை நெருங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஒரிசாவில் நாளை மாலை முதல் பரவலாக மழை பெய்யும் என்றும், பூரி, கஞ்சம், கஜபதி ஆகிய கடற்கரையோர மாவட்டங்களில் 11 சென்டி மீட்டர் அளவுக்கு கனமழை பெய்யும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால், மத்திய மற்றும் வடமேற்கு வங்க‌க் கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

Next Story

மேலும் செய்திகள்