பத்ம விருதுகளை அறிவித்த மத்திய அரசு

மறைந்த முப்படைகளின் தளபதி பிபின் ராவத், கல்யாண் சிங் உள்பட 4 பேருக்கு பத்ம விபூஷண் அறிவிக்கப்பட்டுள்ளது.
x
மறைந்த முப்படைகளின் தளபதி பிபின் ராவத், 
கல்யாண் சிங் உள்பட 4 பேருக்கு பத்ம விபூஷண் அறிவிக்கப்பட்டுள்ளது. 

கலை, சமூகப்பணி, பொது விவகாரங்கள், அறிவியல் மற்றும் பொறியியல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் மற்றும் துறைகளில் சிறப்பாக பணியாற்றுவோருக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. அதன் படி, பத்ம விபூஷண் விருது 4 பேருக்கும், பத்ம பூஷண் விருது 17 பேருக்கும், பத்மஸ்ரீ விருது 107 பேருக்கும் மத்திய அரசு அறிவித்துள்ளது.  பிரபா ஆத்ரே, மறைந்த ராதே ஷியாம் கேம்கா, முப்படைகளின் தளபதி மறைந்த பிபின்  ராவத், மற்றும் கல்யாண் சிங் ஆகியோருக்கு பத்ம விபூஷண் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதே போல் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், ​புத்ததேவ் பட்டாச்சார்யா, கூகுள் நிறுவன சி.இ.ஓ. சுந்தர் பிச்சை, சத்ய நாராயண நாதெள்ளா, மதுர் ஜாஃப்ரே, ரஷீத் கான், சைரஸ் பூனாவாலா உள்ளிட்ட 17 பேருக்கு பத்ம பூஷண் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மொழி மற்றும் இலக்கியப்பிரிவில் சிற்பி பாலசுப்பிரமணியம், கலை பிரிவில் பல்லேஷ் பஜன்த்ரி, சமூக சேவைக்காக தாமோதரன், கலை பிரிவில் பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி​, முத்துக் கண்ணம்மாள், ஏ.கே.சி. நடராஜன், மருத்துவ பிரிவில் மருத்துவர் வீராசுவாமி சேஷய்யா என தமிழகத்தை சேர்ந்த 7 பேர் உள்ளிட்ட 107 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 


Next Story

மேலும் செய்திகள்