கடந்த 5 ஆண்டுகளில் திருமணத்தால் 36,000 தற்கொலைகள் - என்.சி.ஆர்.பி., அறிக்கை

கடந்த 5 ஆண்டுகளில், நாட்டில் நடைபெற்ற 36 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தற்கொலைகளுக்கு திருமண பிரச்சனைகளே காரணம் என என்.சி.ஆர்.பி., அறிக்கை வெளியிட்டுள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் திருமணத்தால் 36,000 தற்கொலைகள் - என்.சி.ஆர்.பி., அறிக்கை
x
தேசிய குற்ற ஆவண காப்பகம், இந்தியாவில் விபத்து மரணம் மற்றும் தற்கொலைகள் பற்றிய ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது. 

இதில், கடந்த 2016ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரை 36 ஆயிரத்து 872 பேர் திருமண பிரச்சனைகளால் தற்கொலை செய்துள்ளதாக தெரிவித்துள்ள என்.சி.ஆர்.பி.,  இந்த காலகட்டத்தில் மொத்தம் 2 ஆயிரத்து 688 விவாகரத்து பெற்றவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக குறிப்பிட்டுள்ளது.  

கடந்த 2016ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரை 21 ஆயிரத்து 750 பெண்களும், 16 ஆயிரத்து 21 ஆண்களும் திருமண பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ள என்.சி.ஆர்.பி.,  இதில் 9 ஆயிரத்து 385 பெண்கள் வரதட்சணை பிரச்சனையால் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. 

2020ஆம் ஆண்டில் மட்டும் நாட்டில் 1 லட்சத்து 53 ஆயிரத்து 52 தற்கொலைகள் பதிவாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ள என்.சி.ஆர்.பி., இதில் அதிக பட்சமாக 19 ஆயிரத்து 909 பேர் மகாராஷ்டிராவில் தற்கொலை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. 

இந்நிலையில், 2018, 2019 மற்றும் 2020ஆம் ஆண்டுகளில் அதிக தற்கொலை விகிதங்களை கொண்ட 5 மாநிலங்களில் கேரளா இருப்பதாக தெரிவித்துள்ள என்.சி.ஆர்.பி., 2018ல் 4வது இடத்திலும், 2019ல் 5வது இடத்திலும் இருந்த கேரளா, 2020ஆம் ஆண்டில் 5வது இடத்தில் உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.  

தற்கொலைகளில் குடும்ப அமைதியின்மையால் 33.6 சதவிகிதம் பேரும், உடல்நல பிரச்சினைகளால் 18 சதவிகிதம் பேரும், போதையால் 6 சதவிகிதம் பேரும், திருமண பிரச்சனைகளாலும் 5 சதவிகிதம் பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக என்.சி.ஆர்.பி. தெரிவித்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்