சபரிமலையில் மண்டல கால பூஜைகள் தொடங்கின - பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி

சபரிமலை ஐயப்பன் கோயிலில், இந்த வருடத்திற்கான மண்டல கால பூஜைகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
சபரிமலையில் மண்டல கால பூஜைகள் தொடங்கின - பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி
x
சபரிமலை ஐயப்பன் கோயிலில், இந்த வருடத்திற்கான மண்டல கால பூஜைகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. 

சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்த வருட மண்டல, மகர விளக்கு பூஜைகளுக்காக, கோயில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. இதன் பின்னர் புதிய மேல்சாந்திகளாக தேர்வு செய்யப்பட்டுள்ள பரமேஸ்வரன் மற்றும் சம்பு நம்பூதிரி ஆகியோர் பொறுப்பேற்றனர். இந்நிலையில், இன்று முதல் மண்டல கால பூஜைகள் தொடங்கின. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு சபரிமலை கோயில் மற்றும் மாளிகைபுரம் கோயில் திறக்கப்பட்டது. பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், கனமழை காரணமாக 3 நாட்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பம்பையில் குளிக்க பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்