பாஜக எம்.பி என்பதால் பிரச்சனை வராது - அமலாக்கத் துறை பற்றி பா.ஜ.க எம்.பி கருத்து

பாஜக எம்.பி என்பதால், அமலாக்கத் துறையால், தனக்கு எந்த பிரச்சனையும் ஏற்படாது என மகாராஷ்ட்ரா எம்.பி ஒருவர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக எம்.பி என்பதால் பிரச்சனை வராது - அமலாக்கத் துறை பற்றி பா.ஜ.க எம்.பி கருத்து
x
மகாராஷ்ட்ரா மாநிலம் சங்லி தொகுதி எம்.பியான சஞ்சய் பாட்டில், ஞாயிறு அன்று சங்லியில் நடந்த பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய போது, தான் ஒரு பாஜக எம்.பி என்பதால் அமலாக்கத் துறை, தன் மீது நடவடிக்கைகள் எதையும் எடுக்காது என்றார். 40 லட்சம் ரூபாய் மதிப்புடைய ஆடம்பர கார்களை, வங்கி கடன்கள் மூலம் தான் வாங்குவதாக கூறிய அவர், தனக்கு உள்ள கடன்களை பற்றி அமலாக்கத் துறை அறிந்தால், ஆச்சரியமடைவார்கள் என்றார்.    அமலாக்கத் துறை மற்றும் வருமான வரி துறைகளை, தங்களுக்கு எதிராக பாஜக அரசு பயன்படுத்துவதாக மகாராஷ்ட்ரா தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேன தலைவர்கள் கூறியது குறிப்பிடத்தக்கது. 


Next Story

மேலும் செய்திகள்