தற்சார்பு இந்தியாவின் 'ஸ்வயம் பூர்ணா கோவா' திட்டம் - பிரதமர் மோடி காணொலி வாயிலாக கலந்துரையாடல்
பல்வேறு திட்டங்களில் கோவா முன்மாதிரியாக உள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்
தற்சார்பு இந்தியாவின் ஸ்வயம் பூர்ணா கோவா திட்டத்தின் பயனாளிகள் உடன் பிரதமர் மோடி காணொலி வாயிலாக கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், திறந்த வெளியில் மலம் கழிப்பதில் இருந்து கோவா முழுமையாக வெளியேறி உள்ளதாகவும், அனைத்து வீட்டிற்கும் மின் இணைப்பு, இலவச ரேஷன் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் கோவா முழுமையாக வெற்றி அடைந்துள்ளது எனவும் தெரிவித்தார். மேலும், கிராமப்புற உள்கட்டமைப்பை நவீன மயமாக்குவதற்கான கோவாவின் நிதி கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 5 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் விவசாயிகள் மற்றும் மீனவர்களின் வருமானம் அதிகரிக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
Next Story