கனமழையால் வீடுகளை இழந்த மக்கள் - வாடகைக்கு வீடு தேடும் குடும்பங்கள்
கேரளாவில் கனமழையால் வீடுகளை இழந்து முகாம்களில் தங்கியுள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு வாடகை வீடுகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கேரளாவில் கனமழையால் வீடுகளை இழந்து முகாம்களில் தங்கியுள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு வாடகை வீடுகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கேரளாவில் பெய்த கனமழை காரணமாக கோட்டயம், இடுக்கி மாவட்டங்களில்நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஏராளமான குடும்பங்கள் நடுத்தெருவுக்கு தள்ளப்பட்டன. இதுவரை, 191 வீடுகள் முழுமையாகவும் 366 வீடுகள் ஓரளவு சேதமடைந்துள்ளதாகவும் அரசாங்க புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 672 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. சுமார் 600 குடும்பங்கள் வீடுகளை இழந்து எங்கு செல்வது என்று தெரியாமல் தவிக்கின்றனர். இதனால் வீடுகளை இழந்த 929 குடும்பத்தினர் முகாம்களில் தங்கி வருகின்றனர். தற்காலிக முகாம்கள் எத்தனை நாட்களுக்கு செயல்படும் என தெரியாத நிலையில், தங்களுக்கென குடியிருப்பு தேவை என்பதால் பலரும் வாடகை வீடுகளை தேடி அலைந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் ஒரே நேரத்தில் ஏராளமானோர் வாடகை வீடு தேடுவதால் போதியளவு வீடுகள் இல்லாத நிலையில் மாற்று வழி என்ன என தெரியாமல் பாதிக்கப்பட்ட மக்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.
Next Story