"இந்திய அரசியலமைப்பின் உத்வேகம் புத்தர்" - பிரதமர் மோடி

இன்றளவும் இந்திய அரசியலமைப்பின் உத்வேகமாக புத்தர் திகழ்வதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்திய அரசியலமைப்பின் உத்வேகம் புத்தர் - பிரதமர் மோடி
x
உத்தரப்பிரதேச மாநிலம் குஷி நகரில் சர்வதேச விமான நிலையத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, பின்னர் மகாபரிநிர்வானா கோவிலுக்கு சென்று, அங்கு சாய்ந்த நிலையில் உள்ள புத்தபிரான் சிலைக்கு அர்ச்சனை செய்து வழிபட்டார். அங்கு போதி மரக்கன்றை நட்டு வைத்த பிரதமர், புத்தரின் போதனைகள் இந்தியா தற்சார்பு கொண்ட நாடாக மாறுவதற்கான ஊக்கத்தை அளிப்பதாக தெரிவித்தார். பின்னர் அஜந்தா ஓவியங்களின் கண்காட்சியை பார்வையிட்ட பிரதமர் மோடி, குஜராத்தின் வத்நகர் மற்றும் பிற இடங்களில் கண்டெடுக்கப்பட்ட புத்த கைவினை பொருட்கள் உள்ளிட்டவற்றை பார்வையிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்