பம்பர் டூ பம்பர் காப்பீடு உத்தரவு ரத்து

புதிய வாகனங்களுக்கு 5 ஆண்டுகளுக்கு பம்பர் டூ பம்பர் காப்பீடு செய்வதை கட்டாயமாக்கிய உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் திரும்ப பெற்றது.
பம்பர் டூ பம்பர் காப்பீடு உத்தரவு ரத்து
x
பம்பர் டூ பம்பர் காப்பீடு உத்தரவு ரத்து

புதிய வாகனங்களுக்கு  5 ஆண்டுகளுக்கு பம்பர் டூ பம்பர் காப்பீடு  செய்வதை கட்டாயமாக்கிய உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் திரும்ப பெற்றது.சாலை விபத்து வழக்கில் இழப்பீடு வழங்கும்படி தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, காப்பீட்டு நிறுவனம் தொடர்ந்த வழக்கில்,செப்டம்பர் 1ம் தேதி முதல் விற்கப்படும் அனைத்து புதிய வாகனங்களுக்கும் பம்பர் டூ பம்பர் முறையில் ஐந்து ஆண்டுகளுக்கு காப்பீடு செய்வதை கட்டாயமாக்க வேண்டும் என உத்தரவிடப்படிருந்தது.இதற்கு இந்திய காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் விநியோகஸ்தர்களாக மட்டுமே காப்பீடு நிறுவனம் செயல்படுவதால்,இந்திய காப்பீடு ஆணையத்தின் ஒப்புதல் இல்லாமல் காப்பீடு  நிறுவனங்களால் சேவைகளில் எந்த மாற்றமும் செய்ய இயலாது என நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, 5 ஆண்டுகளுக்கான பம்பர் டூ பம்பர் காப்பீடு செய்ய வேண்டும் என்ற உத்தரவை அமல்படுத்தும் சூழ்நிலை இல்லை என்பதால் அதனை திரும்பப் பெறுவதாக நீதிபதி அறிவித்தார்.காப்பீடு தொடர்பாக தமிழக அரசின் போக்குவரத்துதுறை சார்பில் வெளியிட்ட சுற்றறிக்கையை ரத்து செய்தும் நீதிபதி உத்தரவிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்