"தடுப்பூசி செலுத்தும் திட்டத்தில் உத்வேகம்" - அமைச்சர் மன்சூக் மாண்டவியா கருத்து
உலகிலேயே மிகப்பெரிய தடுப்பூசி செலுத்தும் திட்டம் இந்தியாவில் செயல்படுத்தப்பட்டு வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சூக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
உலகிலேயே மிகப்பெரிய தடுப்பூசி செலுத்தும் திட்டம் இந்தியாவில் செயல்படுத்தப்பட்டு வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சூக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரசைக் கட்டுப்படுத்த தடுப்பூசி முக்கிய பங்காற்றிவரும் நிலையில், பாரத் பயோ-டெக் நிறுவனத்தின் சார்பாக ஹைதரபாத்தில் மட்டுமே தடுப்பூசி தயாரிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் குஜராத்தின் அங்க்லேஷ்வர் மையத்தில் தடுப்பூசி தயாரிக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதனையடுத்து, இந்த மையத்தில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசியின் வர்த்தக ரீதியிலான முதல் தொகுப்பை மத்திய சுகாதார அமைச்சர் மன்சூக் மாண்டவியா வெளியிட்டார். இதனை தொடர்ந்து பேசிய அமைச்சர், அங்க்லேஷ்வர் மையம், மாதத்திற்கு சுமார் ஒரு கோடி தடுப்பூசிகள் தயாரிக்கும் திறன் கொண்டது என தெரிவித்தார். தடுப்பூசி உற்பத்தி அதிகரிப்பின் மூலம் இந்தியாவின் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தில் பெரும் உத்வேகம் ஏற்பட்டிருப்பதாகவும் கூறினார்
Next Story
