"யானைகள் வனப்பகுதிக்கே உரித்தானவை" - கர்நாடக உயர்நீதிமன்றம் கருத்தால் பரபரப்பு

கோவில்களில் பூஜை மற்றும் ஊர்வலத்திற்கு யானைகளைப் பயன்படுத்துவதும் ஒருவகையான துன்புறுத்தல் என கர்நாடக உயர்நீதிமன்றம் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யானைகள் வனப்பகுதிக்கே உரித்தானவை - கர்நாடக உயர்நீதிமன்றம் கருத்தால் பரபரப்பு
x
கோவில்களில் பூஜை மற்றும் ஊர்வலத்திற்கு யானைகளைப் பயன்படுத்துவதும் ஒருவகையான துன்புறுத்தல் என கர்நாடக உயர்நீதிமன்றம் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்த வழக்கை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அபய் ஹோக்கா தலைமையிலான அமர்வு, யானைகள் என்பது வனத்திற்கு சொந்தமானவை என தெரிவித்துள்ளது.  மற்ற வன விலங்குகளை போல் காட்டினுள் இருக்க வேண்டும் என கூறியதுடன், கோவில்களில் பூஜை மற்றும் ஊர்வலங்களுக்கு யானைகளை பயன்படுத்துவதும் ஒருவிதமான துன்புறுத்தலே என கூறியுள்ளனர்.  அரசு தரப்பில் மூன்று வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டுமென நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இன்னும் சில வாரங்களில் மைசூர் தசரா விழா நடைபெற உள்ள நிலையில், நீதிமன்றத்தின் இந்த கூற்று பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்