மத்திய அமைச்சரவை மாற்றம் - யார் யாருக்கு வாய்ப்பு ?

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மத்திய அமைச்சரவை மாற்றம் இந்த வார இறுதிக்குள் நடைபெற இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
x
மத்திய அமைச்சரவை மாற்றம் - யார் யாருக்கு வாய்ப்பு ? பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மத்திய அமைச்சரவை மாற்றம் இந்த வார இறுதிக்குள் நடைபெற இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.மத்திய அமைச்சர்களாக இருந்த ராம்விலாஸ் பாஸ்வான் மற்றும் சுரேஷ் அங்காடியின் மறைவு, உணவுத் துறை அமைச்சராக இருந்த ஹர்சிம்ரத் கவுர் பாதல் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அந்தத் துறைகளின் பொறுப்பை இதர அமைச்சர்கள் கூடுதலாக கவனித்து வருகின்றனர்.ஒரு அமைச்சர் பல்வேறு துறைகளை கவனித்து வருவதால் அமைச்சர்களுக்கும் கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டுள்ளது.எனவே, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடருக்கு முன்பாக அமைச்சர்களின் பணிச்சுமையை குறைப்பது, அடுத்தாண்டு நடைபெற உள்ள உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டு மத்திய அமைச்சரவையில் மாற்றம் நிகழ்கிறது.அதன்படி, உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் மாநிலத்தை சேர்ந்த நபர்களுக்கு மத்திய அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்படும் என கூறப்படுகிறது.குறிப்பாக பீகார் துணை முதல்வராக இருந்த சுஷில் குமார் மோதி, அப்னா தள் கட்சியை சேர்ந்த அனுப்பிரியா பட்டேல்...அசாம் முன்னாள் முதல்வர் சர்பானந்த சோனோவால், மேற்குவங்க பாஜக தலைவர் திலிப் கோஷ் உள்ளிட்ட 8 க்கும் மேற்பட்ட நபர்களுக்கு அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்பாகவே அமைச்சரவை மாற்றம் நடைபெறும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பல்வேறு காரணங்களினால் அது தள்ளிப் போனது.இந்நிலையில் மழைக்கால கூட்டத்தொடருக்கு முன்பாக மத்திய அமைச்சரவை மாற்றம் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த வார இறுதிக்குள் நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Next Story

மேலும் செய்திகள்