சி.ஏ.தேர்வு தள்ளி வைக்க முடியாது - உச்சநீதிமன்றம்

சி.ஏ.தேர்வுகளை தள்ளி வைக்க உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
சி.ஏ.தேர்வு தள்ளி வைக்க முடியாது - உச்சநீதிமன்றம்
x
சி.ஏ.தேர்வுகளை தள்ளி வைக்க உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.சி.ஏ. தேர்வை தள்ளி வைக்கவும், தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு அளிக்கவும், தேர்வு மையங்களை அதிகரிக்கவும் கோரும் மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கர், தினேஷ் மகேஸ்வரி ஆகியோர் அடங்கிய அமர்வு நடைபெற்றது.மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் மீனாட்சி அரோரா, தற்போதுள்ள சூழலில் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்வது பல மாணவர்களுக்கு இயலாத காரியம் என வாதிட்டார்.இந்தியக் கணக்குத் தணிக்கையாளர் அமைப்பு சார்பில் மூத்த வழக்குரைஞர் ராம்ஜி ஸ்ரீனிவாசன் ஆஜராகி,  கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்றும்,அவர்களுக்கு 2-ஆவது முறை தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ஆர்டி-பிசிஆர் சான்றிதழுக்கு மாற்று ஏற்பாடு, சி ஏ தேர்வு எழுத மையங்கள் வேறு எந்த பயன்பாட்டுக்கும் விடாமல் இருப்பது உள்ளிட்டவை குறித்து விரிவான பதில் அளிக்க இந்திய கணக்கு தணிக்கையாளர் அமைப்புக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்