கேரளா - 12ம் வகுப்பு செய்முறை தேர்வு: ஜூன்28 முதல் தொடங்கும் என அறிவிப்பு

கேரளாவில் பன்னிரெண்டாம் வகுப்பு செய்முறைத் தேர்வுக்கான தேதி, மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.
x
கேரளாவில் பன்னிரெண்டாம் வகுப்பு செய்முறைத் தேர்வுக்கான தேதி, மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 22ம் தேதி முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் தொடங்கும் என கல்வித்துறை ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், தேதி மாற்றம் செய்யப்பட்டு 28ம்தேதி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 17ம் தேதி முதல் 25ம் தேதி வரை, பயிற்சி நிமித்தமாக  மாணவர்கள் பள்ளிகளின் ஆய்வுக்கூடங்களை பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், பன்னிரெண்டாம் வகுப்பு தொழிற்கல்வி பிரிவுகளுக்கான தேர்வு, 21ம்தேதி தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது,

Next Story

மேலும் செய்திகள்