7 வது நாளாக 1 லட்சத்திற்கும் கீழ் பதிவான கொரோனா பாதிப்பு

நாடு முழுவதும் தொடர்ந்து 7-வது நாளாக தினசரி கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்திற்கும் கீழ் பதிவாகி உள்ளது.
x
நாடு முழுவதும் தொடர்ந்து 7-வது நாளாக தினசரி கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்திற்கும் கீழ் பதிவாகி உள்ளது. 

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தின்படி, நேற்று 70 ஆயிரத்து 421 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2 கோடியே 95 லட்சத்து 10 ஆயிரத்து 410ஆக  உயர்ந்துள்ளது. 3 ஆயிரத்து 921 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, மொத்த இறப்பு எண்ணிக்கை மூன்று லட்சத்து 74 ஆயிரத்து 305ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 501 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்த நிலையில், 9 லட்சத்து 73ஆயிரத்து 158 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை 25 கோடியே 48 லட்சத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

Next Story

மேலும் செய்திகள்