துப்புரவு ஒப்பந்ததாரர் மேல் குப்பைகளை கொட்ட வைத்த எம்எல்ஏ!

மும்பையில் குப்பைகளை முறையாக அகற்றாத, ஒப்பந்ததாரர் மீது எம்எல்ஏ கழிவுகளை கொட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
x
மும்பையில் குப்பைகளை முறையாக அகற்றாத, ஒப்பந்ததாரர் மீது எம்எல்ஏ கழிவுகளை கொட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

சண்டிவாலி தொகுதியின் சிவ சேனா எம்எல்ஏ திலிப் லண்டே, மழை பாதிப்புகளை நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது ஒரு சாலையில் குப்பைகள் அகற்றப்படாமலும், மழை நீர் வடியாமல் தேங்கி நின்றதையும் கவனித்தார்.  இதையடுத்து, அப்பகுதியின் துப்புரவு பணிகளுக்கான ஒப்பந்ததாரரை வரவழைத்த எம்எல்ஏ., குப்பைகளை அகற்றாததால் சாலையில் தண்ணீர் தேங்கியிருப்பதை சுட்டிக் காட்டினார். பின்னர், தண்ணீர் தேங்கியிருந்த சாலையில் அவரை அமர வைத்து, பணியாளர்களிடம் உடனடியாக குப்பைகளை அள்ளி, அவர் மீது போடும்படி கூறினார். அதன்படி துப்புரவு பணியாளர்கள் குப்பைகளை அள்ளி, ஒப்பந்ததாரர் மீது கொட்டினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. Next Story

மேலும் செய்திகள்