"டிரைவ் த்ரூ" தடுப்பூசி முகாம் - அமைச்சர் மா.சுப்ரமணியன் துவக்கி வைத்தார்

தமிழகத்தில் கருப்பு பூஞ்சைக்கான மருந்து தட்டுப்பாடு உள்ளதால், அதற்கு இணை மருந்தினை ஆராய்ந்து விரைவில் வெளியிடப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
x
தமிழகத்தில் கருப்பு பூஞ்சைக்கான  மருந்து தட்டுப்பாடு உள்ளதால், அதற்கு இணை மருந்தினை ஆராய்ந்து விரைவில் வெளியிடப்படும் என  அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் வாகனங்களில் அமர்ந்தபடி தடுப்பூசி செலுத்தி கொள்ளும்,  "டிரைவ் த்ரூ " என்ற தடுப்பூசி முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். பொது மக்கள் ஆன் லைன் மற்றும் நேரடியாக பதிவு செய்து மருத்துவமனை வளாகத்தில் கார்களில் இருந்தவாறு தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். கோவாக்சின் தடுப்பூசி ஆயிரத்து 400 ரூபாய்க்கு செலுத்தப்படுகிறது. இந்நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன், கொரோனா பேரிடர் காலகட்டம் என்பதால் பிற நோய்களுக்கான மருத்துவர்களுக்கான தட்டுப்பாடு உள்ளது என்றும், அவசர சிகிச்சைக்காக வருபவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக கூறினார்.  கருப்பு பூஞ்சைக்கு அளிக்கப்படும் மருந்திற்கு இணையான மருந்தை ஒரு குழு, ஆராய்ந்து வருவதாகவும் அதற்கான அறிவிப்பை இரண்டொரு நாளில் வெளியிடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். 


Next Story

மேலும் செய்திகள்