தடுப்பூசி செலுத்தினால்- 20 கிலோ இலவச அரிசி

அருணாச்சலப் பிரதேச மாநிலம், யஸாலி பகுதியின் வட்ட அலுவலர், பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டால் 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என்ற நூதன அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தடுப்பூசி செலுத்தினால்- 20 கிலோ இலவச அரிசி
x
தடுப்பூசி செலுத்தினால்- 20 கிலோ இலவச அரிசி

அருணாச்சலப் பிரதேச மாநிலம், யஸாலி பகுதியின் வட்ட அலுவலர், பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டால் 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என்ற நூதன அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தடுப்பூசி செலுத்திக் கொள்வது குறித்து பல வடகிழக்கு மாநிலங்களில், மக்களிடையே அச்சங்களும் குழப்பங்களும் நிலவி வருகின்றன.குறிப்பாக, தடுப்பூசி செலுத்திக் கொண்டால் ஆண்மைக் குறைவு ஏற்படும் மற்றும் தடுப்பூசி வாயிலாக நுண்ணிய கண்காணிப்புக் கருவி உடலில் செலுத்தப்படும் போன்ற வதந்திகளும் பரவி வருவதால் பொதுமக்கள் தயக்கம் காட்டி வந்தனர்.இதையடுத்து தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் ஆர்வத்தை ஊக்குவிக்க, வட்ட அலுவலர், தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என அறிவித்தார். இந்நிலையில், இதற்கு முன்பு ஒருவர் கூட தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத நிலையில், அறிவிப்பு வெளியான 2 நாட்களில் 80 பேர் வரை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.ஜூன் 20ம் தேதிக்குள், இப்பகுதியில் உள்ள 45 வயதிற்கும் மேற்பட்டவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணையிக்கப்பட்டுள்ள நிலையில், அதுவரை 10கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த நூதன அறிவிப்பு மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதால், இதை மாநிலத்தில் உள்ள பிற கிராமங்களுக்கும் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்