மும்பையில் அடுக்கு மாடி குடியிருப்பு இடிந்து விபத்து... உயிரிழப்பு எண்ணிக்கை 11 ஆக அதிகரிப்பு
மும்பை அருகே அடுக்கு மாடி குடியிருப்பு இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது
மும்பையில் அடுக்கு மாடி குடியிருப்பு இடிந்து விபத்து... உயிரிழப்பு எண்ணிக்கை 11 ஆக அதிகரிப்பு
மும்பை அருகே அடுக்கு மாடி குடியிருப்பு இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், மும்பை மாநகரத்தின் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. இந்நிலையில், மல்வானி பகுதியில் அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்று திடீரென நேற்று இரவு இடிந்து விழுந்தது. இந்த விபத்தில், 9 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். 15-க்கும் மேற்பட்டோரை தீயணைப்பு துறையினர் மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த மேலும் 2 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே, அருகில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்புகளில் இருந்தவர்களை பாதுகாப்பான இடத்துக்கு மாநகராட்சி ஊழியர்கள் மாற்றி உள்ளனர்.
Next Story