சேட்டிலைட் போன் - மாதாந்திர கட்டணம் உயர்வு... மீனவர்கள் எச்சரிக்கை

கன்னியாகுமரி மாவட்டத்தில், ஆழ்கடல் மீன்பிடி விசைப்படகுகளில் பொருத்தப்பட்டிருக்கும் சேட்டிலைட் போன்களுக்கான கட்டண உயர்வுக்கு மீனவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சேட்டிலைட் போன் - மாதாந்திர கட்டணம் உயர்வு... மீனவர்கள் எச்சரிக்கை
x
சேட்டிலைட் போன் - மாதாந்திர கட்டணம் உயர்வு... மீனவர்கள் எச்சரிக்கை  

கன்னியாகுமரி மாவட்டத்தில், ஆழ்கடல் மீன்பிடி விசைப்படகுகளில் பொருத்தப்பட்டிருக்கும் சேட்டிலைட் போன்களுக்கான கட்டண உயர்வுக்கு மீனவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டணம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து, ஏராளமான மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் செல்கின்றனர். அவர்களுக்கு அவசர கால எச்சரிக்கை வழங்குவதற்காக, விசைப்படகுகளில் அரசு சார்பில் சேட்டிலைட் போன்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதற்கான மாதாந்திர கட்டணமாக ஆயிரத்து 481 ரூபாயை மீனவர்கள் செலுத்தி வந்த நிலையில், தற்போது 3 ஆயிரத்து 441 ரூபாய் என பி.எஸ்.என்.எல். நிறுவனம் அதிரடியாக கட்டணத்தை உயர்த்தியோடு, தவறும்பட்சத்தில் 12 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் எனவும் அறிவித்துள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்துள்ள மீனவர்கள், கட்டண உயர்வை திரும்பப் பெறுமாறு வலியுறுத்துகின்றனர். ஏற்கனவே, ஊரடங்கு மற்றும் மீன்பிடி தடைக்காலம் உள்ளிட்டவற்றால் வாழ்வாதாரம் இழந்திருக்கும் நிலையில், இந்த திடீர் கட்டண உயர்வை திரும்பப் பெறாவிட்டால், வரும் 20ம் தேதி குளச்சல் மீன்வளத்துறை அலுவலகத்தில் சேட்டிலைட் போன்களை ஒப்படைக்கப் போவதாகவும், மீனவர்கள் எச்சரித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்